பொருட்பால் · நட்பியல் · பெண்வழிச் சேறல்

குறள் 907பெண்வழிச் சேறல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 184 · ஸ்கேன் 217 · மூலமும் சான்றும்