பொருட்பால் · நட்பியல் · பெண்வழிச் சேறல்

குறள் 906பெண்வழிச் சேறல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்அமையார்தோள் அஞ்சு பவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும், அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

மூலம் · அச்சுப் பக்கம் 184 · ஸ்கேன் 217 · மூலமும் சான்றும்