குறள் 917 — வரைவின் மகளிர்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.
மூலம் · அச்சுப் பக்கம் 186 · ஸ்கேன் 219 · மூலமும் சான்றும்