குறள் 914 — வரைவின் மகளிர்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அருளை விரும்பி ஆராய்ந்திடும் அறிவுடையவர்கள் பொருளை மட்டுமே விரும்பும் விலைமகளிரின் இன்பத்தை இழிவானதாகக் கருதுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 185 · ஸ்கேன் 218 · மூலமும் சான்றும்