குறள் 912 — வரைவின் மகளிர்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆதாயத்தைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு பாகுமொழிபேசும் பொதுமகளிர் உறவை ஒருபோதும் நம்பி ஏமாறக்கூடாது.
மூலம் · அச்சுப் பக்கம் 185 · ஸ்கேன் 218 · மூலமும் சான்றும்