குறள் 931 — சூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெற்றியே பெறுவதாகிலும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கெளவிக் கொண்டு போவதாகிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 189 · ஸ்கேன் 222 · மூலமும் சான்றும்