பொருட்பால் · நட்பியல் · சூது

குறள் 932சூது

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒரு வெற்றியைப் பெற மகிழ்ச்சியில் தொடர்ந்து ஆடி நூறு தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் சூதாடிகளின் வாழ்க்கையில் நலம் ஏற்பட வழி ஏது?

மூலம் · அச்சுப் பக்கம் 189 · ஸ்கேன் 222 · மூலமும் சான்றும்