பொருட்பால் · குடியியல்
100. பண்புடைமை
குறள் 991–1000
- குறள் 991எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்பண்புடைமை என்னும் வழக்கு.
- குறள் 992அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்பண்புடைமை என்னும் வழக்கு.
- குறள் 993உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
- குறள் 994நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புபா ராட்டும் உலகு.
- குறள் 995நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்பண்புள பாடறிவார் மாட்டு.
- குறள் 996பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்மண்புக்கு மாய்வது மன்.
- குறள் 997அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண்பு இல்லா தவர்.
- குறள் 998நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்பண்பாற்றார் ஆதல் கடை.
- குறள் 999நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்பகலும்பாற் பட்டன் றிருள்.
- குறள் 1000பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்கலந்தீமை யால்திரிந் தற்று.