பொருட்பால் · குடியியல்

101. நன்றியில் செல்வம்

குறள் 10011010
  1. குறள் 1001
    வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்செத்தான் செயக்கிடந்த தில்.
  2. குறள் 1002
    பொருளானாம் எல்லாமென் றீயா திவறும்மருளானாம் மாணாப் பிறப்பு.
  3. குறள் 1003
    ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்தோற்றம் நிலக்குப் பொறை.
  4. குறள் 1004
    எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்நச்சப் படாஅ தவன்.
  5. குறள் 1005
    கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கியகோடியுண் டாயினும் இல்.
  6. குறள் 1006
    ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றீத லியல்பிலா தான்.
  7. குறள் 1007
    அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்பெற்றாள் தமியள்மூத் தற்று.
  8. குறள் 1008
    நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்நச்சு மரம்பழுத் தற்று
  9. குறள் 1009
    அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்.
  10. குறள் 1010
    சீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து.