குறள் 1006 — நன்றியில் செல்வம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்றீத லியல்பிலா தான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 204 · ஸ்கேன் 237 · மூலமும் சான்றும்