பொருட்பால் · குடியியல் · நன்றியில் செல்வம்

குறள் 1009நன்றியில் செல்வம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டியஒண்பொருள் கொள்வார் பிறர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 204 · ஸ்கேன் 237 · மூலமும் சான்றும்