பொருட்பால் · குடியியல்
102. நாணுடைமை
குறள் 1011–1020
- குறள் 1011கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்நல்லவர் நாணுப் பிற.
- குறள் 1012ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.
- குறள் 1013ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்நன்மை குறித்தது சால்பு.
- குறள் 1014அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்பிணியன்றோ பீடு நடை.
- குறள் 1015பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்குறைபதி என்னும் உலகு.
- குறள் 1016நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்பேணலர் மேலா யவர்.
- குறள் 1017நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.
- குறள் 1018பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்அறநாணத் தக்க துடைத்து.
- குறள் 1019குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்நாணின்மை நின்றக் கடை.
- குறள் 1020நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவைநாணால் உயிர்மருட்டி அற்று.