பொருட்பால் · குடியியல் · நாணுடைமை

குறள் 1018நாணுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்அறநாணத் தக்க துடைத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களைவிட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்றுவிட்டதாகக் கருத வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 206 · ஸ்கேன் 239 · மூலமும் சான்றும்