பொருட்பால் · குடியியல் · நாணுடைமை

குறள் 1017நாணுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்நாண்துறவார் நாணாள் பவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நாண உணர்வுடையவர்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 206 · ஸ்கேன் 239 · மூலமும் சான்றும்