பொருட்பால் · குடியியல் · நாணுடைமை

குறள் 1011நாணுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்நல்லவர் நாணுப் பிற.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

மூலம் · அச்சுப் பக்கம் 205 · ஸ்கேன் 238 · மூலமும் சான்றும்