பொருட்பால் · குடியியல் · நாணுடைமை

குறள் 1012நாணுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்லநாணுடைமை மாந்தர் சிறப்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உணவு, உடை போன்ற அனைத்தும் எல்லோருக்கும் பொதுவான தேவைகளாக அமைந்திருக்கின்றன; ஆனால் சிறப்புக்குரிய தேவையாக இருப்பது, பிறரால் பழிக்கப்படும் செயல்களைத் தவிர்த்து வாழும் நாணுடைமைதான்.

மூலம் · அச்சுப் பக்கம் 205 · ஸ்கேன் 238 · மூலமும் சான்றும்