பொருட்பால் · குடியியல்

103. குடிசெயல் வகை

குறள் 10211030
  1. குறள் 1021
    கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்பெருமையிற் பீடுடைய தில்.
  2. குறள் 1022
    ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்நீள்வினையான் நீளும் குடி.
  3. குறள் 1023
    குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்.
  4. குறள் 1024
    சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.
  5. குறள் 1025
    குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.
  6. குறள் 1026
    நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.
  7. குறள் 1027
    அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.
  8. குறள் 1028
    குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும்.
  9. குறள் 1029
    இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு.
  10. குறள் 1030
    இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடி.