குறள் 1029 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கிக் கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 208 · ஸ்கேன் 241 · மூலமும் சான்றும்