பொருட்பால் · குடியியல் · குடிசெயல் வகை

குறள் 1024குடிசெயல் வகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயலில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 207 · ஸ்கேன் 240 · மூலமும் சான்றும்