குறள் 1025 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 207 · ஸ்கேன் 240 · மூலமும் சான்றும்