குறள் 1027 — குடிசெயல் வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு.
மூலம் · அச்சுப் பக்கம் 208 · ஸ்கேன் 241 · மூலமும் சான்றும்