பொருட்பால் · குடியியல்
104. உழவு
குறள் 1031–1040
- குறள் 1031சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம் அதனால்உழந்தும் உழவே தலை.
- குறள் 1032உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாதெழுவாரை எல்லாம் பொறுத்து.
- குறள் 1033உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர்.
- குறள் 1034பல்குடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்அலகுடை நீழ லவர்.
- குறள் 1035இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாதுகைசெய்தூண் மாலை யவர்.
- குறள் 1036உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்விட்டேமென் பார்க்கும் நிலை.
- குறள் 1037தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.
- குறள் 1038ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்நீரினும் நன்றதன் காப்பு.
- குறள் 1039செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்தில்லாளின் ஊடி விடும்.
- குறள் 1040இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்நிலமென்னும் நல்லாள் நகும்.