பொருட்பால் · குடியியல் · உழவு

குறள் 1037உழவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.

மூலம் · அச்சுப் பக்கம் 210 · ஸ்கேன் 243 · மூலமும் சான்றும்