பொருட்பால் · குடியியல் · உழவு

குறள் 1032உழவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாதெழுவாரை எல்லாம் பொறுத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 209 · ஸ்கேன் 242 · மூலமும் சான்றும்