பொருட்பால் · குடியியல் · உழவு

குறள் 1039உழவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்தில்லாளின் ஊடி விடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 210 · ஸ்கேன் 243 · மூலமும் சான்றும்