பொருட்பால் · குடியியல்

105. நல்குரவு

குறள் 10411050
  1. குறள் 1041
    இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.
  2. குறள் 1042
    இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்.
  3. குறள் 1043
    தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குர வென்னும் நசை.
  4. குறள் 1044
    இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்.
  5. குறள் 1045
    நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.
  6. குறள் 1046
    நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.
  7. குறள் 1047
    அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.
  8. குறள் 1048
    இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.
  9. குறள் 1049
    நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பா டரிது.
  10. குறள் 1050
    துப்புர வில்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று.