குறள் 1048 — நல்குரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கொலை செய்வதுபோல நேற்று கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 212 · ஸ்கேன் 245 · மூலமும் சான்றும்