குறள் 1047 — நல்குரவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வறுமை வந்தது என்பதற்காக, அறநெறியிலிருந்து விலகி நிற்பவனை, அவன் தாய்கூட அயலானைப் போலத்தான் கருதுவாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 212 · ஸ்கேன் 245 · மூலமும் சான்றும்