பொருட்பால் · குடியியல் · நல்குரவு

குறள் 1046நல்குரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அரிய பல நூல்களின் கருத்துக்களையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 212 · ஸ்கேன் 245 · மூலமும் சான்றும்