பொருட்பால் · குடியியல் · நல்குரவு

குறள் 1049நல்குரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பா டரிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெருப்புக்குள் படுத்துத் தூங்குவதுகூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 212 · ஸ்கேன் 245 · மூலமும் சான்றும்