பொருட்பால் · குடியியல் · நல்குரவு

குறள் 1043நல்குரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குர வென்னும் நசை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 211 · ஸ்கேன் 244 · மூலமும் சான்றும்