பொருட்பால் · குடியியல்

106. இரவு

குறள் 10511060
  1. குறள் 1051
    இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்அவர்பழி தம்பழி அன்று.
  2. குறள் 1052
    இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவைதுன்பம் உறாஅ வரின்.
  3. குறள் 1053
    கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்றிரப்புமோர் ஏஎர் உடைத்து.
  4. குறள் 1054
    இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்கனவிலும் தேற்றாதார் மாட்டு.
  5. குறள் 1055
    கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்றிரப்பவர் மேற்கொள் வது.
  6. குறள் 1056
    கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பையெல்லா மொருங்கு கெடும்.
  7. குறள் 1057
    இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்உள்ளுள் உவப்ப துடைத்து.
  8. குறள் 1058
    இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்மரப்பாவை சென்றுவந் தற்று.
  9. குறள் 1059
    ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்மேவார் இலாஅக் கடை.
  10. குறள் 1060
    இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.