பொருட்பால் · குடியியல் · இரவு

குறள் 1055இரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்றிரப்பவர் மேற்கொள் வது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர் உலகில் இருப்பதால்தான் இல்லாதவர்கள், அவர்களிடம் சென்று இரத்தலை மேற்கொண்டுள்ளனர்.

மூலம் · அச்சுப் பக்கம் 213 · ஸ்கேன் 246 · மூலமும் சான்றும்