பொருட்பால் · குடியியல் · இரவு

குறள் 1060இரவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பைதானேயும் சாலும் கரி.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக் கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

மூலம் · அச்சுப் பக்கம் 214 · ஸ்கேன் 247 · மூலமும் சான்றும்