பொருட்பால் · குடியியல்
107. இரவச்சம்
குறள் 1061–1070
- குறள் 1061கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்.
- குறள் 1062இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.
- குறள் 1063இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்.
- குறள் 1064இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு.
- குறள் 1065தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுண்ணலின் ஊங்கினிய தில்.
- குறள் 1066ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கிரவின் இளிவந்த தில்.
- குறள் 1067இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்கரப்பார் இரவன்மின் என்று.
- குறள் 1068இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.
- குறள் 1069இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.
- குறள் 1070கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்.