பொருட்பால் · குடியியல் · இரவச்சம்

குறள் 1066இரவச்சம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்கிரவின் இளிவந்த தில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தாகம் கொண்டு தவிக்கும் ஒரு பசுவுக்காகத் தண்ணீர் வேண்டுமென இரந்து கேட்டாலும்கூட, அப்படிக் கேட்கும் நாவுக்கு, அதைவிட இழிவானது வேறொன்றுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 216 · ஸ்கேன் 249 · மூலமும் சான்றும்