குறள் 1068 — இரவச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இருப்பதை மறைத்து இல்லையென்று கூறும் கல்நெஞ்சின் மீது, இரத்தல் எனப்படும் பாதுகாப்பற்ற தோணி மோதினால் பிளந்து நொறுங்கிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 216 · ஸ்கேன் 249 · மூலமும் சான்றும்