குறள் 1062 — இரவச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிச்சையெடுத்துத்தான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 215 · ஸ்கேன் 248 · மூலமும் சான்றும்