பொருட்பால் · குடியியல்
108. கயமை
குறள் 1071–1080
- குறள் 1071மக்களே போல்வர் கயவர் அவரன்னஒப்பாரி யாங்கண்ட தில்.
- குறள் 1072நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத் தவலம் இலர்.
- குறள் 1073தேவர் அனையர் கயவர் அவருந்தாம்மேவன செய்தொழுக லான்.
- குறள் 1074அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
- குறள் 1075அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
- குறள் 1076அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க் குய்த்துரைக்க லான்.
- குறள் 1077ஈங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்கூன்கையர் அல்லா தவர்க்கு.
- குறள் 1078சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்கொல்லப் பயன்படும் கீழ்.
- குறள் 1079உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.
- குறள் 1080எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்விற்றற் குரியர் விரைந்து.