குறள் 1074 — கயமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிட தாம் சிறந்தவர்கள் என்று கர்வம் கொள்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 217 · ஸ்கேன் 250 · மூலமும் சான்றும்