குறள் 1072 — கயமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத் தவலம் இலர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப்பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!
மூலம் · அச்சுப் பக்கம் 217 · ஸ்கேன் 250 · மூலமும் சான்றும்