பொருட்பால் · குடியியல் · கயமை

குறள் 1076கயமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்டமறைபிறர்க் குய்த்துரைக்க லான்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

மூலம் · அச்சுப் பக்கம் 218 · ஸ்கேன் 251 · மூலமும் சான்றும்