இன்பத்துப்பால் · களவியல்
109. தகை அணங்குறுத்தல்
குறள் 1081–1090
- குறள் 1081அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலுமென் நெஞ்சு.
- குறள் 1082நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து.
- குறள் 1083பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு.
- குறள் 1084கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக் கமர்த்தன கண்.
- குறள் 1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.
- குறள் 1086கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்இவள் கண்.
- குறள் 1087கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்.
- குறள் 1088ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்நண்ணாரும் உட்குமென் பீடு.
- குறள் 1089பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கணியெவனோ ஏதில தந்து.
- குறள் 1090உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.