இன்பத்துப்பால் · களவியல்
110. குறிப்பறிதல்
குறள் 1091–1100
- குறள் 1091இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்குநோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
- குறள் 1092கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்செம்பாகம் அன்று பெரிது.
- குறள் 1093நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்.
- குறள் 1094யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்தானோக்கி மெல்ல நகும்.
- குறள் 1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்.
- குறள் 1096உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.
- குறள் 1097செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்உறாஅர்போன் றுற்றார் குறிப்பு.
- குறள் 1098அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்.
- குறள் 1099ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள.
- குறள் 1100கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல.