குறள் 1094 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்தானோக்கி மெல்ல நகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காதபோது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என்மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?
மூலம் · அச்சுப் பக்கம் 223 · ஸ்கேன் 256 · மூலமும் சான்றும்