இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்

குறள் 1095குறிப்பறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

மூலம் · அச்சுப் பக்கம் 223 · ஸ்கேன் 256 · மூலமும் சான்றும்