இன்பத்துப்பால் · களவியல் · குறிப்பறிதல்

குறள் 1099குறிப்பறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்காதலார் கண்ணே உள.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொள்வார்.

மூலம் · அச்சுப் பக்கம் 224 · ஸ்கேன் 257 · மூலமும் சான்றும்