இன்பத்துப்பால் · களவியல்

111. புணர்ச்சி மகிழ்தல்

குறள் 11011110
  1. குறள் 1101
    கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள.
  2. குறள் 1102
    பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து.
  3. குறள் 1103
    தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.
  4. குறள் 1104
    நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்.
  5. குறள் 1105
    வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள்.
  6. குறள் 1106
    உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கமிழ்தின் இயன்றன தோள்.
  7. குறள் 1107
    தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்அம்மா அரிவை முயக்கு.
  8. குறள் 1108
    வீழும் இருவர்க் கினிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு.
  9. குறள் 1109
    ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்.
  10. குறள் 1110
    அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு.