குறள் 1106 — புணர்ச்சி மகிழ்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்கமிழ்தின் இயன்றன தோள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.
மூலம் · அச்சுப் பக்கம் 226 · ஸ்கேன் 259 · மூலமும் சான்றும்