இன்பத்துப்பால் · களவியல் · புணர்ச்சி மகிழ்தல்

குறள் 1107புணர்ச்சி மகிழ்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்அம்மா அரிவை முயக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது.

மூலம் · அச்சுப் பக்கம் 226 · ஸ்கேன் 259 · மூலமும் சான்றும்